Friday, May 16, 2014

பீர்கங்காய் மசியல்



தேவை: பீர்கங்காய் ஒன்று,தோல் சீவி சிறு துண்டகளாய் நறுக்கியது 
2 பச்சை மிளகாய் ,இஞ்சி சிறிதளவு( தோல் சீவி சிறு துண்டங்களாகியது )
2 டீ ஸ்பூன் தனியா ,2 டீ ஸ்பூன் துவரம் பருப்பு ,2 மிளகாய் வற்றல்
புளி சிறிய எலுமிச்சம் பழம் அளவு .உப்பு ருசிக்கேற்றவாறு
செய் முறை:புளியினை அரை டம்ளர் நீர் விட்டு ஊறவைத்து கசக்கி சாறேடுக்கவும் .
 பீர்கன்காயினை ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி துண்டுக்களுடன் இட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு,சிறு சிட்டிகை மஞ்சள் தூளுடன் வேக வைக்கவும் . 
தனியா ,மிளகாய் வற்றல் ,துவரம்பருப்பை வாணலியில் எண்ணெய் விடாது வறுக்கவும்.வறுத்து எடுத்ததை மிக்சியில் பொடியாகிடவும்.
பொடியினை சேர்த்து பீர்கன்காயுடன் ,கரைத்த புளியுடன் கொதிக்க விட்ட பின் தேவையான  உப்பினை சேர்த்து இறக்கி வைத்து ,தேங்காய் எண்ணெய் இரு டீ ஸ்பூன் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் .
  இலைக்கு பருப்பு நெய்யுடன் சேர்த்து சூடான சாதத்துடன் பிசைந்து மசியல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் .